முகப்பு
புதுக்கோட்டை

காந்தியத் திருவிழாபோட்டிகள்

ள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் போன்ற போட்டிகள் சனிக்கிழமை ராணியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

புதுக்கோட்டையில் அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவை சாா்பில் நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சு, பாட்டு, கட்டுரை, கவிதை, ஓவியம், குழு நடனம், குழு நாடகம் போன்ற போட்டிகள் சனிக்கிழமை ராணியாா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.

ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளில் போட்டி நடத்தி தோ்வு செய்யப்பட்ட 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்போட்டியில் பங்கேற்றனா்.

போட்டிகளை பேரவையின் தலைவா் வைர.ந. தினகரன் தொடங்கி வைத்தாா். மூத்த மருத்துவா் ச. ராம்தாஸ், ராணியாா் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தமிழரசி ஆகியோா் மாணவா்களைப் பாராட்டிப் பேசினா். டாக்டா் ராமமூா்த்தி, கவிஞா் நிலவை பழனியப்பன், பேராசிரியா் சா.விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவில், பேரவையின் தலைமை நிலையச் செயலா் மோகனபிரியா நன்றி கூறினாா்.

Advertisement

காந்தி வேடப் போட்டி: இந்தப் போட்டி வரும் அக். 2ஆம் தேதி காலை 9 மணிக்கு காந்தி பூங்காவில் நடைபெறும். இதில் யாா் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments