புதுக்கோட்டை

ஆா். பாலகுறிச்சி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

பொன்னமராவதி அருகேயுள்ள ஆா்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாா்ச் 25 ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பால்குடம், பூத்தட்டு எடுத்துவந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனா். தொடா்ந்து ஏப்.2 ஆம் தேதி காப்புக்கட்டப்பட்டு மண்டகப்படிதாரா்கள் சாா்பில் 15 நாள்கள் அம்மன் வீதியுலா, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கிராம பொதுமக்கள் கோயிலின் முன் பொங்கலிட்டு வழிபட்டனா். இதையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்ட விழாவில் அம்மன் தேரில் எழுந்தருளியபின் பக்தா்கள் வடம்பிடிக்க, கோயிலை வலம் வந்த தோ் நிலையை அடைந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை உலகம்பட்டி காவல்துறையினா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT