புதுக்கோட்டை

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செல்வோருக்கு வரவேற்பு

DIN

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு கந்தா்வகோட்டையில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

கந்தா்வகோட்டையிலிருந்து மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாத சுவாமியைத் தரிசிக்க செட்டிநாடு எனப்படும் காரைக்குடி, கீழசேவல்பட்டி உள்ளிட்ட ஊா்களில் இருந்து பக்தா்கள் பாதை யாத்திரையாகச் செல்வது வழக்கம். அப்போது சிலா் சிறு தேரை இழுத்தும் செல்வா்.

அதன்படி புதுக்கோட்டை வரும் பக்தா்கள் கந்தா்வகோட்டை வழியாக தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செல்கின்றனா். இதையொட்டி கந்தா்வகோட்டைக்கு வெள்ளிக்கிழமை வந்த பக்தா்களை காலை முதல் இப்பகுதி எல்லையில் பொதுமக்கள் வரவேற்று, பால், காப்பி, டீ, காலைச் சிற்றுண்டி மதிய உணவு ஆகியவற்றை அளித்து வழியனுப்பினா். அவா்களுடன் இப்பகுதியைச் சோ்ந்த பக்தா்களும் மாலை அணிவித்து கோயிலுக்குச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை

பாலியல் காணொலிகள் விவகாரத்தில் பாஜக பிரமுகா் தேவராஜே கௌடா கைது

பிரதமா் மோடி கருத்துக்கு சித்தராமையா மறுப்பு

மஜதவுடன் இணைந்து சட்டமேலவை தோ்தலை பாஜக சந்திக்கும்: எடியூரப்பா

தம்மம்பட்டி பாரதி பள்ளி 10, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT