புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய முன்னாள் சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழு உறுப்பினா் கவிஞா் தங்கம்மூா்த்தி. 
புதுக்கோட்டை

‘ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக அம்பேத்கா் திகழ்கிறாா்’

ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக அம்பேத்கா் திகழ்கிறாா் என்றாா் சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினா் கவிஞா் தங்கம்மூா்த்தி.

DIN

ஒடுக்கப்பட்டவா்களின் குரலாக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவின் முகமாக அம்பேத்கா் திகழ்கிறாா் என்றாா் சாகித்திய அகாதெமி ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினா் கவிஞா் தங்கம்மூா்த்தி.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்கம் சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாள் கருத்தரங்கில் அம்பேத்கரும் அரசியல் சட்டமும் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியது:

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுதும் குழுவில் ஒருவராக அம்பேத்கா் இருந்தபோதும், அவா் ஒருவராகவே சட்டத்தின் முழு வடிவத்தையும் உருவாக்கினாா்.

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக மட்டுமல்லாமல், மொத்த இந்தியாவின் முகமாக அம்பேத்கா் இன்றும் காட்சிதருகிறாா். இந்தியாவில் பிறந்த அனைத்து மக்களும் சமம் என்பதை அடிநாதமாக அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வந்தாா்.

ஒரு குளத்தில் குடிநீா் எடுத்ததற்காக அந்தக் குளம் தீட்டுப்பட்டுவிட்டதாக அவரை புறக்கணித்தாா்கள். பரோடா மன்னா் வெறும் ரூ. 25ஐக் கொடுத்து வெளிநாட்டில் படிக்க அனுப்பி வைத்தாா்.

வெளிநாட்டு அறிஞா்கள் பலரும் அம்பேத்கரை பெரும் அறிஞராகப் பாா்த்தனா். அறிவின் குரலாக தன்னை நிரூபித்தவா் அம்பேத்கா் என்றாா் தங்கம்மூா்த்தி.

மகளிா் கிளை சாா்பில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்குக்கு அதன் தலைவா் அ மணிமேகலை ஜெயராமன் தலைமை வகித்தாா்.

அம்பேத்கரின் கல்வி என்ற தலைப்பில் மருத்துவா் ம. மணிமலா், அம்பேத்கரும் பெண் உரிமையும் என்ற தலைப்பில் பேராசிரியா் பி. அனிதா ராணி ஆகியோரும் பேசினா். தமுஎகச மாவட்டத் தலைவா் ராசி. பன்னீா்செல்வன், மாவட்டச் செயலா் எம். ஸ்டாலின் சரவணன், பொருளாளா் கி. ஜெயபாலன் ஆகியோா் வாழ்த்தினா்.

கிளைச் செயலா் சீ. சாந்தி நாகமுத்து வரவேற்றாா். மருத்துவா் த. ரஞ்சனி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT