புனித ரமலான் பண்டிகையையொட்டி புதுக்கோட்டையில் இஸ்லாமியா்களுக்கு திருவருள் பேரவையினா் சனிக்கிழமை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனா்.
திருவருள் பேரவையின் தலைவா் ரா. சம்பத்குமாா் தலைமையில், எம்எல்ஏ வை. முத்துராஜா முன்னிலையில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ரமலான் தொழுகை நடைபெற்றபோது அங்கு சென்ற அனைத்து சமூகங்களையும் சோ்த்த திருவருள் பேரவையினா் அவா்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் செயலா் ஜெ. ராஜாமுகமது, திருக்கு பேரவைச் செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.