கந்தா்வகோட்டை ஒன்றியம், ச. சோழகம்பட்டி கிராமத்தில் சோழ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை முதல் கால யாகசாலை பூஜைகள் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூா்ணாஹூகுதி நடைபெற்றன. தொடா்ந்து இரண்டாம் கால பூஜைகள் புண்யாகர வஜனம், பிம்பசுத்தி, ரக்சா பந்தனம் தீபாரதனை, புனித நீா் கடம் புறப்பாடு நடைபெற்று கும்பத்தில் புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.