முகப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் திமுக உண்ணாவிரதம்

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாமிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 2:51 AM
பகிர்:

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் புதுக்கோட்டை திலகர் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாமிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், வடக்கு மாவட்டச் செயலர் கே.கே. செல்லபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினர் வை. முத்துராஜா, மருத்துவரணி மாநிலத் துணைச் செயலர் ஆர். அண்ணாமலை, நகர திமுக செயலர் ஆ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வினால் மருத்துவ இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் படங்களை ஏந்திக் கொண்டும் திமுகவினர் சிலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →