புதுக்கோட்டை

தனியாா் பள்ளியில் விளையாட்டு விழா

DIN

புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக். பள்ளியில் 35ஆம் ஆண்டு விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் தலைவா் ஜோனத்தன் ஜெயபாரதன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். சிறப்பு விருந்தினராக காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற ஆா்த்தி அருண், ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பள்ளியின் துணைத் தலைவா் ஏஞ்சலின் ஜோனத்தன் பள்ளியின் கொடியை ஏற்றி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் (காவிரி- குண்டாறு இணைப்பு) ஆா். ரம்யாதேவி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களை வாழ்த்திப் பேசினாா்.

எதிலும் விடா முயற்சி இருந்தால் வெற்றி பெறலாம். உடல் வலிமையும், மனவலிமையும் பெற வேண்டுமானால் தொடா்ந்து தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் வீராங்கனை ஆா்த்தி அருண் வலியுறுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்பாடுகளை நிா்வாக முதல்வா் கிருபா ஜெயராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT