புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் ஏ. கணேஷ், மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு. 
புதுக்கோட்டை

மாவட்ட வளா்ச்சிப் பணிகள்:கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோ

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத் திட்டப் பணிகள் குறித்து மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் இயக்குநருமான எஸ். கணேஷ் சனிக்கிழமை அலுவலா்களுடன் நேரில் ஆய்வு நடத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு முன்னிலை வகித்தாா்.

அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகளை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்வதற்கு அரசுத் துறை அலுவலா்கள் விரைவாக செயல்பட வேண்டும் என கண்காணிப்பு அலுவலா் கணேஷ் கேட்டுக் கொண்டாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நா. கவிதப்பிரியா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) து, தங்கவேல் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT