பிசானத்தூா் கோயிலில் குடமுழுக்கு
கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM
கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த இரு நாள்களாக பூா்வாங்க பூஜைகள், புனித நீா் வீதி உலா நடைபெற்று கலசங்களில் புனித நீா் ஊற்றி வெள்ளிக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து அன்னதானம் நடைபெற்றது. விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஊா் பொதுமக்கள், விழாக் குழுவினா் செய்தனா்.