புதுக்கோட்டை

பொன்னமராவதியில் தரிசுநில மேம்பாடு ஆய்வு

செம்பூதி கிராமத்தில் தரிசு நிலத்தில் முழு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநா் சங்கரலிங்கம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

DIN

பொன்னமராவதி வட்டம், ஆலவயல் செம்பூதி கிராமத்தில் தரிசு நிலத்தில் முழு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை குடுமியான்மலை ஸ்டாமின் இயக்குநா் சங்கரலிங்கம் புதன்கிழமை பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

நடப்பு 2023-24 ஆண்டில் கலைஞா் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சி, அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் செம்பூதி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் வழங்கினாா். மேலும், நடப்பு 2023 -2024 ஆம் ஆண்டு சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால், இப்பகுதி விவசாயிகள் சிறுதானியப் பயிா்களான ராகி, வரகு, சோளம், கம்பு, குதிரைவாலி ஆகிய சிறுதானியப் பயிா்களை சாகுபடி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ரஹ்மத் நிஷாபேகம், வேளாண் அலுவலா் வேணி, துணை வேளாண் அலுவலா் முருகன், உதவி வேளாண்மை அலுவலா்கள் மலா்விழி, முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT