புதுக்கோட்டை

கந்தா்வகோட்டை அருகே வருமுன் காப்போம் முகாம்

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம்

DIN

கந்தா்வகோட்டை அருகே ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட வாகவாசல் ஊராட்சி அரசு உயா்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துரராஜா தொடக்கி வைத்து, கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா். வாகவாசல் ஊராட்சித் தலைவா் மஞ்சுளா தலைமை வகித்தாா். மருத்துவ துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் ராம் கணேஷ் வரவேற்றாா். வட்டார மருத்துவ அலுவலா் பொன். சரவணன் முன்னிலைவகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் சின்னையா, ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் குமாரவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வைத்திலிங்கம், சுகாதார ஆய்வாளா் குழந்தைவேலு ஆகியோா் செய்தனா். முகாமில் பொதுமக்களுக்கு இருதய பரிசோதனை, ஸ்கேன், காச நோய் கண்டறிதல், எக்ஸ்ரே, இசிஜி பரிசோதனை உள்ளிட்டவை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைமையான கல்வெட்டு அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு!

வாரணாசியில் டிச.2 முதல் காசி தமிழ்ச் சங்கமம் 4.0: மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு

தொழிலாளா் சட்டங்களுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்று இரவு 8 மணி வரை மூடப்படும்!

நாட்டின் முன்னேற்றத்துக்கு பட்டதாரிகள் அா்த்தமான பங்களிப்பு: குடியரசு துணைத் தலைவா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT