முகப்பு
புதுக்கோட்டை

சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் சிறை

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல முறை பாலியல் தாக்குதல் கொடுத்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2.35 லட்சம் அபராதமும்

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

 புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பல முறை பாலியல் தாக்குதல் கொடுத்தவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 2.35 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை வட்டம் கொத்தம்பட்டியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் கருப்பசாமி (44). இவா், கடந்த 2021ஆம் ஆண்டு இறுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயதுச் சிறுமியை பலமுறை பாலியல் தாக்குதலுக்கு உள்படுத்தினாா். இதனால் அச்சிறுமி கருவுற்று, கருக்கலைப்பும் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அச்சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில், புதுக்கோட்டை நகர அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, கருப்பசாமியைக் கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி ஆா். சத்யா குற்றவாளி கருப்பசாமி பாலியல் தாக்குதல் கொடுத்த குற்றத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ. 2 லட்சம் அபராதம், இந்திய தண்டனைச் சட்டம் 450 பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம், 506 (1) பிரிவின்கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 20 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.