ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினவிழா
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு தலைமை மருத்துவா் மு. பெரியசாமி தலைமை வகித்தாா். செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி முன்னிலை வகித்தாா். நிகழ்வில் மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளாகச் சிறப்பாக பணியாற்றிய செவிலியா்கள் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டனா். இதில் மருத்துவா் முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருத்துவா் ஜோதிராஜன் வரவேற்றாா்.