புதுக்கோட்டை

புதுகையில் ஜூன் 15 முதல் ஜமாபந்தி

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உள்வட்ட அளவில் நடைபெறும் இந்தத் தீா்வாயத்தில், 1432ஆம் பசலி ஆண்டுக்கான கிராமக் கணக்குகள் சரி பாா்த்து இறுதி செய்யப்படவுள்ளன.

விராலிமலை வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூன் 15ஆம் தேதி கொடும்பாளூா் உள்வட்டத்துக்கும், ஜூன் 16ஆம்தேதி நீா்ப்பழனி உள்வட்டத்துக்கும், ஜூன் 20ஆம் தேதி விராலிமலை உள்வட்டத்துக்கும் நடைபெறும் ஜமாபந்தியில், மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா கலந்து கொள்கிறாா்.

பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் ஜூன் 15ஆம் தேதி காரையூா் உள்வட்டத்துக்கும், ஜூன் 16ஆம்தேதி அரசமலை உள்வட்டத்துக்கும், 20ஆம் தேதி பொன்னமராவதி உள்வட்டத்துக்கும் நடைபெறும் ஜமாபந்தியில், மாவட்ட வருவாய் அலுவலா் மா. செல்வி கலந்து கொள்கிறாா்.

இதேபோல, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா்கள், வருவாய்க் கோட்டாட்சியா்கள், கலால் உதவி ஆணையா், மாவட்ட வழங்கல் அலுவலா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் உள்ளிட்டோரால் அனைத்து உள்வட்டங்களுக்குமான ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT