புதுக்கோட்டை

இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் தற்கொலை முயற்சி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இணையவழி சூதாட்டத்தில் பணத்தை இழந்த இளைஞா் புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

கீரனூா் அருகேயுள்ள மேலப்புதுவயலைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் (23). திருச்சி சாலையிலுள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை பாா்த்து வருகிறாா். இவா், தனது கைப்பேசி

வாயிலாக இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிகிறது. இதில், கடன் வாங்கியும், வீட்டில் உள்ள பொருள்களை விற்றும் பல லட்சம் ரூபாய் இழந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மன உளைச்சலுக்குள்ளான ராமகிருஷ்ணன், புதன்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் அவரை கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு மருத்துவக் குழுவினா் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

SCROLL FOR NEXT