புதுக்கோட்டை

விராலிமலை மலைக்கோயில் மண் சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்

விராலிமலை மலைக்கோயில் பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி உருவத்திலான மண் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர்.

DIN

விராலிமலை மலைக்கோயில் பாதை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சுவாமி உருவத்திலான மண் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயில் சிறப்புப் பெற்ற ஸ்தலமாகும், மலைக்கோயில் மேலே செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. படிகள் மூலம் செல்லும் பாதை ஒன்றும், யானை அடி பாதை என மற்றொன்றும், வாகனங்களில் செல்ல தார் சாலை பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தார் சாலை ஓரங்களில் அமைக்கப்பட்டிருந்த சுவாமிகள் உருவத்திலான பல்வேறு மண் சிலைகளை மர்ம நபர்கள் சிலர் உடைத்து சென்றுள்ளனர். கந்தசஷ்டி விழா நடைபெற்று வரும் இவ்வேளையில் சிலைகள் உடைக்கபட்டு கிடப்பது மனதில் வேதனை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு மலைப் பாதை ஓரங்களில் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கமே.. சம்யுக்தா ஷான்!

மலரில் மலர்ந்த கனவு... அய்ரா கிருஷ்ணா!

மாஞ்சோலை... அனீத்!

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அழகே... ஸாரா யஸ்மின்!

அமைதி கிடைத்த இடம்... செளந்தர்யா!

SCROLL FOR NEXT