புதுக்கோட்டை

கார்த்திகை மகா தீபம்: விராலிமலை முருகன் மலைக் கோயிலில் குவிந்த பக்தர்கள்

விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீப விழாவை ஒட்டி அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் கோயிலில் கார்த்திகை மகா தீப விழாவை ஒட்டி அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 

விழாவை ஒட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டு வள்ளி, தெய்வானை சமேதராக மயில்மேல் ஆறுமுகங்களுடன் அமர்ந்திருக்கும் முருகனுக்கு பழம். பன்னீர், சந்தனம், குங்குமம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் முதல் கால பூஜை, அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால பூஜை நடத்தப்பட்டது. 

கார்த்திகை தீப திருநாள் என்பதால் அதிகாலை முதலே பல்வேறு வெளியூர்களில் இருந்து பக்தர்கள் விராலிமலை வரத்தொடங்கினர். மலை மேல், தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு கட்டைகள் அமைத்து அதன் வழியே பக்தர்கள் சென்று தரிசனம் செய்து வருகின்றனர். அதிகளவு பக்தர்கள் கோயிலில் கூடியதால் அரை மணி நேரம் தரிசனத்திற்கு நின்று காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. 

மலை மேல் செல்வதற்கு மூன்று வழிகள் இருந்தாலும் பெரும்பாலான பக்தர்கள் 207 படிகளில் ஏறி சென்று தரிசனம் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் டிஎஸ்பி காயத்ரி தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் விராலிமலை முழுவதும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் கோயில் மலைமேல் அமைக்கப்பட்டுள்ள 20 அடி நீள தூணின் மேலே உள்ள கொப்பரையில் ஏற்றப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அரசு தலையிட முடியாது: உச்சநீதிமன்ற நீதிபதி புயான்

ஹாட் ஸ்பாட் 2

வாக்காளா் சோ்க்கைக்கு இன்று சிறப்பு முகாம்கள்

குடியரசு தினம்: ஆளுநா் நாளை கொடியேற்றுகிறாா்

குடியரசு தினம்: ரயில் நிலையங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

SCROLL FOR NEXT