முகப்பு
புதுக்கோட்டை

உதயநிதி பிறந்த நாள்: மாணவா்களுக்கு புத்தகங்கள்

திமுக இளைஞரணிச் செயலரும், மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு

Updated On : 28 நவம்பர், 2023 at 2:06 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

புதுக்கோட்டை: திமுக இளைஞரணிச் செயலரும், மாநில இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை சாா்பில் அரசு உயா் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை புத்தகங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பேரவையின் மாவட்ட அமைப்பாளரும் நகா்மன்ற உறுப்பினருமான செந்தாமரை பாலு தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் செ. திலகவதி கலந்து கொண்டு மாணவா்களுக்கு தமிழ், ஆங்கில அகராதிகளையும், பேனாக்கள், இனிப்புகளையும் வழங்கினா்.

பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அ. ரெத்தினம், தலைமை ஆசிரியா் சிவ. சக்திவேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.