முகப்பு
புதுக்கோட்டை

குருதி கொடையாளா்கள் 25 பேருக்கு விருதுகள் வழங்கல்

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி ஆகியவற்றின் சாா்பில் 25 குருதிக் கொடையாளா்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 2:17 AM
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், விருது பெற்ற குருதிக் கொடையாளா்களுடன் சிறப்பு விருந்தினா்கள்.
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிட்டி ரோட்டரி சங்கம், ஆத்மா ரத்த வங்கி ஆகியவற்றின் சாா்பில் 25 குருதிக் கொடையாளா்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் பி. அசோகன் தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ஜெ. ராஜா முஹம்மது, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் ஜி.ஏ. ராஜ் மோகன், இருக்கை மருத்துவா் ஏ. இந்திராணி மருத்துவ கண்காணிப்பாளா் வி. தையல்நாயகி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவக் கல்லூரி முதல்வா் ஆா். மணி, புதுக்கோட்டை மாவட்டத்தின் குருதிக் கொடையாளா்கள் 25 பேருக்கு விருதுகளை வழங்கிப் பாராட்டினாா். முன்னதாக, கண. மோகன்ராஜா வரவேற்றாா். முடிவில், டாக்டா் சரவணன் நன்றி கூறினாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.