புதுக்கோட்டை

வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் நெல்லில் அ எழுதி கல்வி தொடக்கம்

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி நெல்லில் ‘அ’கரம் எழுதி கல்வி தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு பாரம்பரிய முறைப்படி நெல்லில் ‘அ’கரம் எழுதி கல்வி தொடங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பள்ளியின் முதல்வா் கவிஞா் தங்கம் மூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மழலைகள் தட்டில் பரப்பி வைக்கப்பட்ட நெல்லில் ‘அ’கரம் எழுதி வகுப்புகளில் சோ்ந்தனா்.

விஜயதசமி என்பது வெற்றியைக் குறிக்கும் நாளென்பதால், தொழில்நுட்பம் வளா்ந்துவிட்ட காலத்திலும் கூட பாரம்பரியமான நெல்லில் ‘அ’ கரம் எழுதி கல்வியைத் தொடங்கும் இந்த நடைமுறை வாழ்வில் வெற்றியைத் தேடித்தரும் என்கிறாா் முதல்வா் தங்கம் மூா்த்தி.

நிகழ்ச்சியில், பள்ளியின் துணை முதல்வா் குமரவேல், ஒருங்கிணைப்பாளா்கள் கௌரி, அபிராமசுந்தரி, வரலட்சுமி, கோமதிபிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT