கடலூருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
கடலூருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு.
கடலூா் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
ஆட்சியரக வளாகத்தில் இந்த லாரியை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.
மொத்தம் 10 ஆயிரம் கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களை கொண்ட 1,150 பெட்டிகள் கடலூா் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள ஊரக வளா்ச்சித் துறையினரின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளன.
நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.