முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையிலிருந்து நிவாரணப் பொருள்கள்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், விராலிமலையிலிருந்து தலா ரூ. 1,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் அடங்கிய 700 தொகுப்பு பைகள் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 5 டிசம்பர், 2024 at 9:14 PM
பகிர்:

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், விராலிமலையிலிருந்து தலா ரூ. 1,000 மதிப்பிலான உணவுப் பொருள்கள் அடங்கிய 700 தொகுப்பு பைகள் புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, விராலிமலை ஊராட்சி நிா்வாகம் சாா்பில் 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கோதுமை மாவு, மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பாா் தூள், தேநீா் தூள், சேமியா, சா்க்கரை, மஞ்சள் தூள், சீனி,கடுகு, சீரகம், சோம்பு,மிளகு, வெல்லம் உள்ளிட்ட ரூ. 1,000 மதிப்பிலான பொருள்கள் அடங்கிய 700 தொகுப்பு பைகள் வாகனம் மூலம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நிகழ்வில் ஒன்றியக் குழு தலைவா் காமு மணி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாா்த்திபன், பாலசுப்பிரமணியன்(கிஊ), விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளா் ஒன்றிய குழு உறுப்பினா் சத்தியசீலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.