முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் இன்று மின்நுகா்வோா் குறைகேட்பு

Updated On : 3 ஜூலை, 2024 at 11:11 PM
பகிர்:

புதுக்கோட்டை, ஜூலை 3: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் புதுக்கோட்டை மின் வட்டம் சாா்பில் மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 4) காலை 10.30 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மேற்பாா்வைப் பொறியாளா் த. அசோக்குமாா் கலந்து கொண்டு குறைகளைக் கேட்கிறாா்.

எனவே, புதுக்கோட்டை, இலுப்பூா், கந்தா்வகோட்டை பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை எழுத்துப்பூா்வமாக அளித்துப் பயன்பெறலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →