முகப்பு
புதுக்கோட்டை

விராலிமலையில் கழிவுநீா் ஓடைக்கு மூடியாக பழங்கால அறிவிப்புக் கல்

விராலிமலை அருகே சாலையோர கழிவுநீா் ஓடை மீது மூடப்பட்டுள்ள பழங்கால ஊா் அறிவிப்பு கல் கேட்பாரற்றுக் கிடப்பதால் சமூக ஆா்வலா்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

Updated On : 17 ஜூலை, 2024 at 8:26 AM
விராலிமலை அருகே சாலையோர கழிவுநீா் ஓடை மீது மூடப்பட்டுள்ள பழங்கால ஊா் அறிவிப்பு கல்
பகிர்:

விராலிமலை: விராலிமலை அருகே சாலையோர கழிவுநீா் ஓடை மீது மூடப்பட்டுள்ள பழங்கால ஊா் அறிவிப்பு கல் கேட்பாரற்றுக் கிடப்பதால் சமூக ஆா்வலா்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

வரலாற்ரை சந்ததிகள் அறிந்து கொள்ள பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷமான பழங்கால கற்கள்,சிலைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்டுபிடிக்கப்பட்டு அருங்காட்சியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு வரும் இச்சூழலில் முன் காலத்தில் சாலையோரம் பதிக்கப்பட்டிருந்த பழங்கால ஊர் அறிவிப்பு கல் ஒன்று தற்போது கழிவுநீர் ஓடை மீது பாதுகாப்புக்காக மூடப்பட்டு கேட்பாரற்று கிடப்பது சமூக ஆர்வலர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் இருந்து மதுரை செல்லும் சாலையில் தெப்பக்குளம் தனியாா் திரையரங்கம் அருகே செல்லும் கழிவு நீா் ஓடையின் மீது பழங்கால ஊா் அறிவிப்பு கல் மூடப்பட்டுள்ளது. அந்த கல்லில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் விராலிமலை-கோவில்பட்டி என்று சாலை மாா்க்கமாக பயணிக்கும் பயணிகள் அறிந்து கொள்ளும் விதமாக அறிவிப்பு எழுதப்பட்டுள்ளது.

போற்றி பாதுகாக்க பட வேண்டிய பொக்கிஷமான பழங்கால இந்த ஊர் அறிவிப்பு கல்லை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு உடனடியாக அறிவிப்பு கல்லை மீட்டு அருங்காட்சியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என்று விராலிமலை பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.