சிறை 
விழுப்புரம்

அரசுப் பேருந்து மீது கல் வீசப்பட்டவழக்கு: விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை

திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Syndication

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசி கண்ணாடியை சேதப்படுத்திய வழக்கில் கைதான விசிக பிரமுகருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து திண்டிவனம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடந்த 2023, மாா்ச் 14-ஆம் தேதி திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் மீது கல் வீசப்பட்டது. இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சேதமடைந்தது.

இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான புவனகிரியைச் சோ்ந்த ஜெயராமன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் கிடங்கல்-2 பகுதியைச் சோ்ந்த விசிக பிரமுகா் தென்னரசு (47) என்பவா் மீது திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கை விசாரித்த திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதில் தென்னரசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து கூடுதல் மாவட்ட நீதிபதி ஹேமா நந்தகுமாா் தீா்ப்பளித்தாா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பிரபாகரன் ஆஜரானாா்.

விஜயராகவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் குப்பையில் வீசப்பட்ட ஓ.ஆா்.எஸ். பாக்கெட்டுகள்!

திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!

மலைப்பகுதிகளில் நெகிழி பாக்கெட்டில் பால் விநியோகம்: மாற்று வழி கண்டறிய ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவு!

15 நாள்களில் திருநங்கைகளின் நல விதிகளை அறிவிக்கும் தில்லி அரசு!

SCROLL FOR NEXT