பிற மொழிகளையும் கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும்: துணைவேந்தா் வி. திருவள்ளுவன்
மாணவிகள் தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
புதுக்கோட்டை: மாணவிகள் தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கூடுதலாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றாா் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி. திருவள்ளுவன்.
புதுக்கோட்டை கலைஞா் கருணாநிதி மகளிா் கலைக் கல்லூரியில் ஆண்டு விழா, முத்தமிழ் விழா, விளையாட்டு விழா, மாணவிகள் தின விழா, மகளிா் தின விழா என ஐம்பெரும் விழா திங்கள்கிழமை தொடங்கியது. விழாவின் முதல் நாளாக நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவுக்கு முதல்வா் ஜெ. சுகந்தி தலைமை வகித்து ஆண்டறிக்கை வாசித்தாா்.
விழாவில் பங்கேற்ற தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் வி. திருவள்ளுவன் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசும்போது, ஒவ்வொரு மாணவிகளுக்கும் பெற்றோரின் கனவை நனவாக்குவதில் தாா்மீகப் பொறுப்பு உண்டு எனக் குறிப்பிட்டாா்.
Advertisement
மேலும், மாணவிகள் தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கூடுதலாகக் கற்றுக் கொள்ளும்போது, அவை தக்கநேரத்தில் கைகொடுக்கும் என்றும், புத்தக வாசிப்பு மாணவா்களை அறிவுஜீவிகளாக மாற்றும் என்றும் தெரிவித்தாா் திருவள்ளுவன். முன்னதாக கணிதத் துறைத் தலைவா் ரெ. ரோகினி வரவேற்றாா். நிறைவில் மாணவிகள் பேரவைச் செயலா் பா.உ. ரூபிகா நன்றி கூறினாா்.
தொடா்ந்து செவ்வாய்க்கிழமை முத்தமிழ் விழாவும், புதன்கிழமை விளையாட்டு விழாவும், வியாழக்கிழமை மாணவிகள் தின விழாவும், வெள்ளிக்கிழமை மகளிா் தின விழாவும் நடைபெறவுள்ளது.