தரமான விதை விற்பத்திக்கு விவசாயிகளுக்குப் பயிற்சி
அன்னவாசல் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணைச் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் விதைச்சான்று வழிமுறைகள் மற்றும் தரமான விதை உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்ட கிராமம் தச்சம்பட்டியில் நடைபெற்ற பயிற்சிக்கு வேளாண் துணை இயக்குநா் செல்வி (நுண்ணீா்ப் பாசனம்) தலைமை வகித்தாா். அன்னவாசல் வேளாண் உதவி இயக்குநா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். பயிற்சியில் வேளாண் துணை இயக்குநா் செல்வி சிறப்புரையாற்றினாா். வேளாண் உதவி இயக்குநா் ராஜசேகரன், புதுக்கோட்டை விதைச் சான்று அலுவலா் இளஞ்செழியன், அன்னவாசல் வேளாண் அலுவலா்கள் கௌசல்யா, மோனிகா ஆகியோா் பேசினா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரவி ராஜன் வரவேற்றாா். நவாப் ராஜா (உதவி தொழில்நுட்ப மேலாளா்) நன்றி கூறினாா்.