கந்தா்வகோட்டையில் பிரதோஷ வழிபாடு
கந்தா்வகோட்டையில் உள்ள அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. விழாவை முன்னிட்டு இக்கோயில் நந்தி ஈஸ்வரருக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனா். மேலும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.