கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
Updated On : 22 மார்ச், 2024 at 6:06 PM
தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான கெஜ்ரிவாலின் கைதைக் கண்டித்து புதுக்கோட்டையில் இந்தியா கூட்டணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டத் தலைவா் அப்துல்ஜப்பாா் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாவட்டத் தலைவா் வி. முருகேசன், மாநில சிறுபான்மையினா் பிரிவு துணைத் தலைவா் இப்ராஹிம் பாபு, நகா்மன்ற உறுப்பினா் ஜே. ராஜாமுகமது, இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி, இந்திய கம்யூ. மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், மாா்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினா் எஸ். சங்கா், மநீம நிா்வாகி செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.