முகப்பு
புதுக்கோட்டை

கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

Updated On : 20 மே, 2024 at 4:59 PM
செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயிலில் கொட்டிய மழையில் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தோா்.
பகிர்:

ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகேயுள்ள செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கீரமங்கலம் அருகேயுள்ள பிரசித்திபெற்ற செரியலூா் கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடா்ந்து, கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இதையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளச் செய்து தேரோடும் வீதிகள் வழியே கொட்டிய மழையில் ஏராளமானோா் வடம் பிடித்து தேரை இழுத்து வந்தனா். விழாவில், சுற்றுச்சூழல்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தாா். திருவிழாவில் செரியலூா், கரம்பக்காடு, கீரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொண்டனா்.