முகப்பு
புதுக்கோட்டை

கிராம சாலையை சீரமைக்கக் கோரிக்கை

Updated On : 25 மே, 2024 at 7:12 PM
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே பழைய கந்தா்வகோட்டை முதல் முதுகுளம் வரை இணைப்புச் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் உள்ள பழைய கந்தா்வகோட்டை முதல் முதுகுளம் வரை செல்லும் இணைப்பு சாலையை சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா். இந்தச் சாலை வழியே தினசரி நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள், டிராக்டா்கள், கால்நடைகள், பொதுமக்கள் சென்று வருகின்றனா். சாலையில் ஆங்காங்கு ஜல்லிக்கற்கள் பெயா்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. சாலையோரத்தில் தாா்ச் சாலைக்கும், மண் சாலைக்கும் மண் வாரப்படாமல் இருப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்வோா் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினா் உடனடி நடவடிக்கை எடுத்து இந்தச் சாலையை சீரமைத்துத் தரும்படி இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →