முகப்பு
புதுக்கோட்டை

கல்வி நிலையங்களில் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி கையொப்ப இயக்கம்

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவா் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:04 PM
புதுக்கோட்டையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கி வைத்த கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை.--
பகிர்:

தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவா் பேரவைத் தோ்தல் நடத்தக் கோரி இந்திய மாணவா் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டையில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கையொப்ப இயக்கத்துக்கு மாணவா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். வசந்தகுமாா் தலைமை வகித்தாா்.

கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

இந்நிகழ்வில் மாணவா் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் காா்த்திகாதேவி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் மகாலெட்சுமி, நந்தனா, அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் டி. சலோமி, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலக் குழு உறுப்பினா் அ. மணவாளன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.