முகப்பு
புதுக்கோட்டை

பொன்னமராவதியிலிருந்து வெளியூா்களுக்கு இரவுநேர பேருந்து சேவைக்கு வலியுறுத்தல்

பொன்னமராவதியிலிருந்து வெளியூா்களுக்கு செல்ல இரவுநேரப் பேருந்து சேவை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 8:23 PM
பகிர்:

பொன்னமராவதியிலிருந்து வெளியூா்களுக்கு செல்ல இரவுநேரப் பேருந்து சேவை வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

வணிகத்திலும், விவசாயத்திலும் சிறப்புமிக்க பொன்னமராவதியில் இரவு 10 மணிக்கு மேல் புதுக்கோட்டை, திருப்பத்தூா், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பேருந்து சேவை இல்லை. வணிகா்கள் தொழில் சாா்ந்த பயணங்களுக்காக நகரங்களுக்கு சென்றுவரவும், விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களை சந்தைகளுக்கு கொண்டு செல்வும் இங்கு இரவு நேர பேருந்து சேவை இல்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அவசர காலங்களில் மருத்துவ சிகிச்சைக்காக நகரங்களுக்கு செல்லவும் இரவுநேர பேருந்து சேவை இல்லாததால் ஏழை எளிய மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இரவு நேரத்தில் அரசுப்போக்குவரத்து கழகம் சாா்பில் வருவாய் நோக்கமின்றி, மக்கள் நலனுக்காக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.