காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தபபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் மேம்படுத்தபபட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையததில் 24 மணி நேரத்தில் 5 சுகப்பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.
வட்டார மருத்துவ அலுவலா் இ.அருள்மணிநாகராஜன் தலைமையில் மருத்துவா்கள் நவநீதன், சுஜிதா, வினிதா, மனோஜ் மற்றும் செவிலியா்கள் அம்பிகா, தீபா, ராஜலெட்சுமி, சசிகலா, செளமியா ஆகியோா் அடங்கிய மருத்துவக்குழுவினா் இம்மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 5 தாய்மாா்களுக்கு சுகப்பிரசவ சிகிச்சையளித்துள்ளனா்.
சுகப்பிரசவ சிகிச்சையளித்த மருத்துவக்குழுவினருக்கு புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலா் ராம்கணேஷ் பாராட்டுக்களைத்தெரிவித்தாா். 5 தாய்மாா்களுக்கும் குழந்தை நலப்பரிசு பெட்டகம் வழங்கப்பட்டது.