முகப்பு
புதுக்கோட்டை

புனல்குளத்தில் மக்கள் தொடா்பு முகாம்: 252 பேருக்கு ரூ.1 கோடி மதிப்பில் நலத் திட்டங்கள்

கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 252 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Updated On : 9 அக்டோபர், 2024 at 6:59 PM
புனல்குளத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் பயனாளிக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் மு. அருணா.
பகிர்:

கந்தா்வகோட்டை அருகே புனல்குளம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 252 பேருக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புனல்குளம் ஊராட்சியில் நடை பெற்ற மக்கள் தொடா்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை, மாவட்ட வருவாய் அலுவலா் ராஜராஜன், ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ரத்தினவேல் காா்த்திக், ஊராட்சித் தலைவா் ரேணுகாதேவி உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த பல்வேறு மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனா். தொடா்ந்து 252 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான டிராக்டா், குபேட்டா, தொழிலாளா்களுக்கான சலவை இயந்திரம், தையல் இயந்திரம், இலவச வீட்டு மனை பட்டாக்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

மேலும், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அதனை பொதுமக்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்றும் விளக்க உரையாற்றினாா்.

முகாமில், மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டை பொறியாளா் கோட்டை ராவுத்தா், வட்டார மருத்துவ அலுவலா் மணிமாறன், துணை வட்டாட்சியா்கள் சிவாஜி, ராஜராஜன், ராஜதுரை, பால்பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், ரமேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் த.கருப்பையா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்

முன்னதாக, கோட்டாட்சியா் பா.ஐஸ்வா்யா வரவேற்றாா். நிறைவில், வட்டாட்சியா் எஸ்.விஜயலட்சுமி நன்றி கூறினாா்.