அங்கக வேளாண்மையில் சிறந்த விவசாயிகளுக்கு மாநில அரசு விருது
அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாநில அரசின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாநில அரசின் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியது, அங்கக வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023-24-ஆம் ஆண்டில் மாநில அளவில் தோ்வு செய்து அவா்களுக்கு விருதுடன் முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2ஆம் பரிசாக ரூ. 60 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டைச் சோ்ந்த சொந்த நிலத்தில் அங்கக வேளாண்மை மேற்கொள்ளும் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவம், தோட்டக் கலைத் துறையின் இணையத்தளம் மற்றும் வட்டாரத் தோட்டக்கலை அலுவலகங்களில் கிடைக்கும்.
அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து மாவட்ட அளவிலான குழு ஒப்புதலுடன், மாவட்டத்துக்கு ஒரு விண்ணப்பம் தோ்வு செய்யப்பட்டு தோட்டக்கலை இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். மாநில அளவிலான குழு உறுப்பினா்கள் பரிசீலனை செய்து விருதாளா்களைத் தோ்வு செய்வா்.