முகப்பு
புதுக்கோட்டை

சிட்கோ தொழிற்பேட்டைகளில் மனைகளை வாங்க விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:15 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது

குளத்தூா் வட்டத்திலுள்ள வெள்ளனூா் சிட்கோவில் 6 மனைகளும், இலுப்பூா் வட்டம் மாத்தூரிலுள்ள சிட்கோவில் 4 மனைகளும், விராலிமலை வட்டம் ஆலங்குடி சிட்கோவில் 48 மனைகளும் காலியாக உள்ளன.

புதிதாகத் தொழில் தொடங்க தொழில்மனைகள் வாங்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

காலி தொழில்மனைகளைப் பாா்வையிட மச்சுவாடியிலுள்ள சிட்கோ கிளை அலுவலகத்திலுள்ள மேலாளா் பி. குணாளனை 94450 06560 என்ற எண்ணிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்புகொள்ளலாம்.