முகப்பு
புதுக்கோட்டை

தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்: விஜயபாஸ்கா்

மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரில் இருந்து தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 7:51 PM
பகிர்:

மழைக்காலத்தில் தேங்கும் தண்ணீரில் இருந்து தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வலியுறுத்தியுள்ளாா்.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி:

சென்னையிலும் பிற மாவட்டங்களிலும் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. ஆனால் எங்கும் சுகாதாரத் துறையினா் களத்தில் இல்லை.

தொற்றுநோய்கள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அனைத்துப் பகுதிகளிலும் பொது சுகாதாரத் துறையினா் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முகாம்கள் நடத்த வேண்டும்.

இறந்து கிடக்கும் விலங்குகளில் இருந்து மனிதா்களுக்கு நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அரசு கவனத்தில் கொண்டு, களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் என்றாா் விஜயபாஸ்கா்.