FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
அழகிய இல்லம்

வீட்டிலிருந்து கருகிய வாசனை வெளியேற யோசனை!

வீட்டுக்குள் இருந்து கருகிப்போன வாசனை வெளியேற புதிய யோசனைகள்..

Updated On : 21 பிப்ரவரி 2026, 9:01 am IST
சமையலறை - DPS
பகிர்:

வீடு என்றால் பலவும் இருக்கும். ஊதுபத்தி வாசனை, பால் பொங்கி வழிந்த வாசனை என. சில நேரம் பாத்திரத்தில் சமைக்கும்போது மறந்துவிட்டுவிட்டால் கருகிப்போய்விடும். பாத்திரத்தைக்கூட தேய்த்து எடுத்துவிடலாம். வீட்டுக்குள் இருக்கும் கருகிய வாசனையை வெளியேற்றத்தான் வழி தெரியாது.

அதற்கு சில சின்ன சின்ன யோசனைகள்..

சமையல் செய்யும் போது கவனக் குறைவால், சமையல் கருகிப்போய் கெட்ட வாடை வரலாம். அதனை வெளியேற்ற ஒரு கிண்ணம் தண்ணீரில் 3 வட்டமாக நறுக்கிய எலுமிச்சை துண்டுகளையும் அதோடு சில கிராம்புகளையும் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். அது கொதிக்க கொதிக்க அறையைச் சுற்றி வந்த சமையல் கருகிப் போன வாசனை காணாமல் போய்விடும். அறையே மணம் கமழும்.

Advertisement

Advertisement

லிக்விடு க்ளன்சர் அல்லது பினாயில் எடுத்து சிறிது தண்ணீரில் கலந்து, வாஷ் பேஷனில் ஊற்றி சில நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இதை வாரத்துக்கு இரண்டு முறை செய்து வர, வாஷ் பேஷன் பளபளக்கும்.

கொஞ்சம் வினிகர் அதனுடன் பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை உங்கள் பாத்ரூம் டைல்ஸ்களில் தெளித்து சில நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு ஒரு துணியை கொண்டு துடைத்து எடுக்கலாம்.

வினிகர் உங்களுக்கு அழுக்கை நீக்குவதோடு பேக்கிங் சோடா கெட்ட துர்நாற்றத்தை நீக்குகிறது. இதில் எந்த கெமிக்கல்களும் இல்லை. இருந்தாலும், பயன்படுத்துவதற்கு முன் கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.

கடல் உணவுகள் போன்ற அசைவம் சமைக்கும்போது ஏற்படும் வாசனையை போக்க ஈஸியான பொருள் பட்டை. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் பட்டையை பொடித்துப் போட்டு கொதிக்க விடுங்கள். வாசனை ஓடிவிடும்.

வீட்டிலிருந்து வரும் துர்நாற்றங்களை போக்கும் அதிக ஆற்றல் கொண்டது உப்பு. வீட்டில் எந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டுமோ, குறிப்பாக, பிசுபிசுவென்று இருக்கிற இடமாக இருந்தால் அந்த இடத்தில் 2 தேக்கரண்டி உப்பைக் கொட்டி, பின் குளிர்ந்த நீர் தெளித்து, நன்கு தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பிசுபிசுப்பும் போய்விடும். இந்த இடமும் பளிச் சென்று மாறிவிடும். அதுபோன்று வீட்டை தண்ணீரில் துடைத்தாலோ அல்லது கழுவினாலோ சிறிது உப்பை தண்ணீரில் கலந்தால், தரையில் உள்ள கிருமிகளை அழித்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments