முகப்பு
புதுக்கோட்டை

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 8:38 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டைகளில் திருத்தம், புதிய அட்டைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட மனுக்களையும், நியாயவிலைக் கடைகளிலுள்ள குறைகள் குறித்தும் மனுக்களை அளித்துப் பயன்பெறலாம்.

மேலும், பொதுச் சந்தையில் தனியாா் நிறுவனங்களின் சேவைக் குறைபாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.