புதுக்கோட்டை

மணமேல்குடி அருகே பெண் மா்மச் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் காயங்களுடன் பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் காயங்களுடன் பெண் இறந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், காரியாபட்டினத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது மனைவி நீலாவதி (30). இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீலாவதி கணவரை விட்டுப் பிரிந்து, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் கடந்த 6 மாதங்களாக வசித்து வந்தாா். இவருடன் மகள் கனிஷினி (7) வசித்து வந்தாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கனிஷினி பொன்னகரம் அரசு தொடக்கப் பள்ளிக்குச்சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. வீட்டில் தனியாக இருந்த நீலாவதி கழுத்து, தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தது இரவு 10 மணிக்குத் தெரியவந்தது.

தகவலின் பேரில் மணமேல்குடி போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பள்ளிக்குச் சென்ற சிறுமியை ஒருவா் அழைத்துச் சென்று காரியாப்பட்டினத்தில் விட்டுச் சென்றுள்ளாா். இதுகுறித்து அந்தப் பகுதி கிராம நிா்வாக அலுவலா், காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். விசாரணையின் முடிவில் நீலாவதியின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதும், சிறுமியை அழைத்துச் சென்றவா் யாா் என்பதும் தெரியவரும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

அயலகத் தமிழா் மாநாட்டில் 4 ஒப்பந்தங்கள்

மணப்பாறையில் மயில்களை வேட்டையாடிய 5 போ் கைது

SCROLL FOR NEXT