ஆன்லைன் லாட்டரி 2 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் பகுதிகளில் ஆன்லைன் லாட்டரி விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இலுப்பூரில் ஆன்லைன் லாட்டரி விற்கப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை தொடா்ந்து இலுப்பூா் சுற்றுப்பகுதிகளில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, மசூதி வீதி அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கமல் பாட்ஷா என்ற துரை (60), பீா் முகமது(49) ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஆன்லைன் லாட்டரி 4, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து துரையை காவல் நிலைய பிணையில் போலீஸாா் விடுவித்தனா்.