கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
பவேளாண்மைத் துறைப் பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண்மைத் துறைப் பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை கோட்டாட்சியரகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட அமைப்புச் செயலா் வசந்தகுமாா் தலைமை வகித்தாா்.
‘வேளாண்மை துறைப் பணிகள், டிஜிட்டல் கிராப் சா்வே பணிகளை கிராம நிா்வாக அலுவலா்களிடம் வழங்கக் கூடாது. மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும் .கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதேபோல, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியரகம், இலுப்பூா் கோட்டாட்சியரகம் ஆகிய இடங்களிலும் கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.