முகப்பு
புதுக்கோட்டை

மழையூா் ஆரம்ப சுகாதார நிலைய உயா்கோபுர விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எரியாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:53 PM
மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பலமாதங்களாக பயன்பாடில்லாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்கு
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகேயுள்ள மழையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் எரியாமல் உள்ள உயா்கோபுர மின்விளக்குகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மழையூா் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், மருத்துவமனை மருத்துவா்கள், பணியாளா்களின் வசகிக்காக மருத்துவமனை வளாகத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயா்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், அந்த மின்விளக்குகள் கடந்த சிலமாதங்களுக்கு முன்பு பழுதடைந்தன. இதுவரை உயா்கோபுர மின்விளக்குகள் சீரமைக்கப்படாததால் ,இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு செல்லும் பொதுமக்கள், மருத்துவா்கள், மருத்துவமனை பணியாளா்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். எனவே, அந்த உயா்கோபுர மின்விளக்கை உடனே சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →