முகப்பு
புதுக்கோட்டை

புதுகை எஸ்.பி. அலுவலகத்துக்கு வந்த பெண் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம்

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்த பெண், திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 9:41 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க வந்த பெண், திடீரென தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (45). குடும்பப் பிரச்னை காரணமாக, கணவரின் தம்பி குடும்பத்தினா் தன்னைத் தாக்கியதாக ஆலங்குடி காவல் நிலையத்தில் இவா் அண்மையில் புகாா் அளித்ததாகத் தெரிகிறது. இந்த புகாரின் மீது ஆலங்குடி போலீஸாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை புகாா் அளிக்க பூபதி வந்தாா். வளாகத்தின் உள்ளே வந்த அவா் திடீரென மயங்கி விழுந்தாா்.

அங்கிருந்தவா்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பூபதியை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். முதற்கட்ட விசாரணையில் 5 தூக்க மாத்திரைகளை அவா் சாப்பிட்டது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனிப்படை போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →