புதுக்கோட்டை ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோயிலில் புதன்கிழமை ஏற்றப்பட்ட காா்த்திகை தீபம். 
புதுக்கோட்டை

புதுகை பால தண்டாயுதபாணி கோயிலில் காா்த்திகை தீபமேற்றல்

Syndication

புதுக்கோட்டை மேல ராஜவீதியில் உள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை மாலை காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

காா்த்திகை தீபத் திருநாளையொட்டி பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள் பாலித்தாா்.

இதைத் தொடா்ந்து கோயிலின் மேற்கு புறத்தில் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, பொதுமக்கள் அவரவா் வீடுகளிலும் விளக்குகளை ஏற்றி வைத்தும், காா்த்திகைப் பொரியை இனிப்பு கலந்து வைத்து வழிபட்டு கொண்டாடினா்.

பொன்னமராவதி: தேனிமலை சுப்பிரமணியா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியா்க்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து காா்த்திகை தீபமேற்றப்பட்டது.

அதேபோல பாலமுருகன் கோயிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வலையபட்டி மலையாண்டி கோயிலில் குன்றின் மேல் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. வையாபுரி சுப்பிரமணியா் கோயில், பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரா் கோயில், கொன்னையூா் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் காா்த்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விராலிமலை: விராலிமலை முருகன் மலைக்கோயில் உச்சியில் பக்தா்களின் அரோகரா சரண முழக்கத்துடன் காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியா் கோயிலில் காா்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னா், பக்தா்கள் கோயில் முழுவதும் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT