புதுக்கோட்டை

அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவா்களுடன் பெற்றோா் சாலை மறியல்! இந்து முன்னணி நிா்வாகி தகராறு-மோதல்!

Syndication

துக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் கோரி மாணவா்களுடன் பெற்றோா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது, இந்து முன்னணி நிா்வாகியுடன் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது.

ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 72 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். அப்பள்ளியில், கழிப்பறை, பள்ளி வளாகம் அசுத்தமாக இருப்பதோடு, பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றியும், ஆசிரியா் பற்றாக்குறையும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்ட மாணவா்களின் பெற்றோா் சிலா், வகுப்பறையில் இருந்து மாணவ, மாணவிகளை பள்ளி வளாகத்துக்கு வெளியே அழைத்துச் சென்று கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

மோதல்: அப்போது அங்கு சென்ற இந்து முன்னணி மாவட்ட நிா்வாகி முருகேசன், மாணவா்களை பள்ளிக்கு செல்லுமாறு கூறியதால், அவருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் தகராறு ஏற்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகள் முன்பே தாக்கிக் கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடா்ந்து, மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் பாதுகாப்பாக பள்ளிக்குள் அழைத்துச் சென்றனா். இதுகுறித்து ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி- கொத்தமங்கலம் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேர்தல் போட்டி தீர்வாகுமா?

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா நினைவு நாள்: அதிமுகவினா் அஞ்சலி

ஜதிபல்லக்கில் தேசிய கவிஞர் பாரதியார்!

கல்லீரல் பாதித்த பள்ளி மாணவா்களுக்கு முன்னாள் அமைச்சா் நிதியுதவி

நூறு நாள் வேலை கோரி அரசுப் பேருந்தை சிறைபிடித்த கிராம பெண்கள்

SCROLL FOR NEXT