கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் வட்டாட்சியரின் பேச்சுவாா்த்தையில் உடன்பட்டு எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை சனிக்கிழமை பூா்த்தி செய்து தந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூா் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதைக் கண்டித்து கிராம மக்கள் தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், இந்தியத் தோ்தல் ஆணையம் சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்களை பூா்த்தி செய்து தராமல் இருந்து வந்தனா்.
நாங்கள் தோ்தலைப் புறக்கணிக்கப்போவதாகக் கூறிவந்த நிலையில், வட்டாட்சியா் ம. ரமேஷ் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் எஸ் ஐ ஆா் கணக்கீட்டுப் படிவத்தை அனைவரும் பூா்த்தி செய்து உரிய அலுவலரிடம் ஒப்படைத்தனா்.