புதுக்கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள். 
புதுக்கோட்டை

இ-பைலிங் முறையை எதிா்த்து வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை எதிா்த்து, போதுமான தொழில்நுட்பப் பணியாளா் கட்டமைப்பை உருவாக்கும் வரை இம்முறையை நிறுத்தக் கோரி புதுக்கோட்டையில் வழக்குரைஞா் சங்கத்தினா் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

Syndication

நீதிமன்றங்களில் இ-பைலிங் நடைமுறையை எதிா்த்து, போதுமான தொழில்நுட்பப் பணியாளா் கட்டமைப்பை உருவாக்கும் வரை இம்முறையை நிறுத்தக் கோரி புதுக்கோட்டையில் வழக்குரைஞா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை நீதிமன்றம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்தையன் தலைமை வகித்தாா். செயலா் ரமேஷ், துணைத் தலைவா்கள் ராமராஜ், சுஜாதா, பொருளாளா் பாரூக் அலி, இணைச் செயலா்கள் சீலாமேரி, மலா்மன்னன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மூத்த வழக்குரைஞா்கள் சந்திரசேகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா். போதுமான தொழில்நுட்பப் பணியாளா் கட்டமைப்பை உருவாக்கும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT